நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! - ஆளுநர் ரவி
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேதாஜி இல்லையென்றால் 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் இல்லை! – ஆளுநர் ரவி

Murugesan M by Murugesan M
Jan 23, 2024, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இல்லை என்றால் 1947 ம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது எனவும், 1942 க்கு பின்னர் காந்தியின் சுதந்திரப் போராட்டம் பலனளிக்கவில்லை என தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி  தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தர் அரங்கில், சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தமிழக ஆளுநர் ஆர் .என் ரவி,

ஆங்கிலேயர் சென்ற பின்னர் நீண்ட காலம் நம் பாரம்பரியத்தை பண்பாட்டையும், ஆன்மீக சிறப்பையும் மறந்தோம். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் மறந்தோம். குழப்பத்திற்கும் ஆளானோம்.

நான் இந்திய தேசிய ராணுவம் குறித்து மிகவும் வியப்பு அடைகின்றேன். எண்ணற்ற வீரர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கு பெற்று உள்ளனர். இந்திய சுதந்திரபோராட்டத்தில் குறிப்பிடதக்கவர்களாகவும், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திலும் தமிழர்கள் நிறைந்து இருந்துள்ளனர்.

ஒரு சிலரை மட்டும் தான் நாம் சுதந்திர போராட்ட வீரர்களாக அடையாள படுத்தி உள்ளோம். ஆனால் நமக்கு தெரியாத நிறைய சுதந்திர போராட்ட வீரராகள் பற்றி நாம் தெரிந்து கொள்ளவில்லை. நேதாஜியின் படையில் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நேதாஜி பெண்கள் படையை கட்டமைத்த பின்னர் 7 தலைமுறைகளுக்கு பிறகே இந்திய இராணுவத்தில் பெண்கள் பொறுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

1942 ஆம் ஆண்டிற்கு பிறகு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. இந்திய தேசிய ராணுவத்தினுடைய கட்டமைப்பு மற்றும் அவர்களின் கப்பற்படை மற்றும் விமானப்படையின் அச்சுறுத்தல் தான் நமக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது.

மேலும் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைவதற்கு நேதாஜியும் இந்திய தேசிய ராணுவமும் காரணம்.  நேதாஜி இல்லையென்றால் 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

இந்திய தேசிய காங்கிரசால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்பதை முழுமையாக ஏற்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு அது ஒரு சிறிய காரணம் அவ்வளவுதான். ஆனால் இந்திய தேசிய ராணுவத்தின் புரட்சி தான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கான மிக முக்கியமான காரணமாக இருந்தது.

அப்போதைய இங்கிலாந்து பிரதமர், இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டம் இந்தியா சுதந்திரம் அடைய ஒரு சிறிய காரணம் எனவும், நேதாஜியின் உடைய புரட்சியும் இந்திய தேசிய ராணுவத்தின் உடைய பலமும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க மிகப்பெரிய காரணமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.

1946 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரிட்டிஷார் ராணுவத்தில் இருந்த இந்தியர்களும் புரட்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய தேசிய ராணுவமும் புரட்சியில் ஈடுபட்டிருந்தது, அதனை கண்டு தான் பிரிட்டிஷார் இனி இந்த நாட்டை நம்மால் ஆள முடியாது என்ற எண்ணத்திற்கு வந்தனர். அப்போதே இந்திய தேசிய காங்கிரஸின் போராட்டம் பலனளிக்காது என தெரிந்து விட்டது. நம் பல்கலைக்கழகங்கள் நேதாஜி, INA, குறித்து ஆராய்சியில் அதிகளவில் ஈடுபட வேண்டும் என தெரிவித்தார்.

 

முன்னதாக சென்னை ராஜ் பவனில் ஆளுநர் ஆர். என். ரவி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags: Governor R.N.RaviBirthday of Netaji Subhash Chandra Bose
ShareTweetSendShare
Previous Post

விழுப்புரம் – திருப்பதி விரைவு இரயில்: பகுதியளவில் ரத்து!

Next Post

டிஜிட்டல் உள்கட்டமைப்பில் வேகமாக வளர்ச்சி அடையும் இந்தியா : எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies