19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய நாள் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான்; தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் உள்ள பஃபலோ பார்க் என்ற மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 21 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜம்ஷித் சத்ரன் 22 ரன்களை எடுத்தார். அடுத்த அதிகபட்சமாக அரபு குல் 10 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஓரிலக்க ரன்களிலே ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 25 ரன்களை எஸ்ட்ராவாக கொடுத்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 91 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மத்தேயு 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரியான் மற்றும் எவால்ட் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தாமஸ் ஜாக்சன் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு 92 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கபட்டது. இந்த இலக்கை எளிதில் எட்டுவார்க என்று எதிர்பார்த்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்தது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக தாமஸ் ஜாக்சன் 26 ரன்களை எடுத்தார். அடுத்த அதிகபட்சமாக லாச்லான் ஸ்டாக்போல் 12 ரன்களை எடுத்தார்.
மற்ற வீரர்கள் ஓரிலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர். 3 பேர் டக் அவுட் ஆகினர். இதனால் 92 என்ற எளிய இழக்க எட்ட நியூசிலாந்து அணி தவித்தது.
கடைசியாக நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 90 ரன்களை எடுத்திருந்த போது ரங்களே வராமல் வெற்றி பெற போராடியது.
அப்போது ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் நசீர் கான் ஸ்ட்ரிக்கில் இல்லாத மற்றொரு பக்கம் இருக்கும் வீரர் பந்து போடுவதற்கு முன்பே கிறிஸ்ஸை விட்டு சென்றதால் பந்துவீச்சாளர் பந்தை ஸ்டம்ப்பில் அடித்து ரன் அவுட் ஆக்கினார்.
அப்போது நியூசிலாந்து அணி வெற்றி பெற 2 ரன்கள் தேவைப்பட்டது, அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி பெற 1 விக்கெட் தேவைப்பட்டது.
28 வது ஓவர் முடிய நியூசிலாந்து அணி 2 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 24 ரன்களை எஸ்ட்ராவாக கொடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக அல்லா கசன்ஃபர் 3 விக்கெட்களை வீழ்த்தினார். கலீல் அகமது மற்றும் அரபு குல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
நசீர் கான் 1 விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருது 5 விக்கெட்களை வீழ்த்திய மத்தேயுவுக்கு வழங்கப்பட்டது.