5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.
தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச மற்றும் 44-வது அகில இந்திய குற்றவியல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறது.
இந்திய குற்றவியல் சட்டங்கள் மற்றும் சாட்சிகள் சட்டங்கள் நீக்கப்பட்டு, புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நான் மிகுந்த தைரியத்துடன் இந்தச் சட்டங்களை முன்னோடியாகச் செயல்படுத்தி வருகிறேன். ஒவ்வொரு குற்றச் சம்பவங்களிலும் வழக்குகளுக்காக தடய அறிவியல் அதிகாரிகளின் வருகையை நாங்கள் கட்டாயமாக்குகிறோம் என்ற முடிவை எடுத்துள்ளோம்.
இச்சட்டங்களின்படி 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை கிடைக்கும். இது விசாரணையை எளிதாக்கும். நீதிபதிகளின் பணியும் எளிதாகும். இதனுடன், முழு செயல்முறையையும் நவீனமயமாக்க முயற்சிக்கிறோம். தற்போது அது வெவ்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதால் 5 ஆண்டுகளாகும். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீனமானதாக இருக்கும்.
ஒரு அரசாங்கம் 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால், அது 5, 6 மாற்றங்களைச் செய்கிறது. ஆனால், வெறும் 10 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் 50-க்கும் மேற்பட்ட மாற்றங்களைச் செய்துள்ளோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 9,000-க்கும் மேற்பட்ட அறிவியல் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் இடம் பெறுவார்கள்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கையை எங்கள் அரசு கொண்டு வந்துள்ளது. இந்தக் கல்விக் கொள்கை முழுக்க முழுக்க இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுக்காக, இதுபோன்ற ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வருகிறோம்.
குற்றங்களை தடுப்பதில், நடத்தை அறிவியலும் கடுமையான நிர்வாகத்தின் முக்கியப் பங்கு வகிக்கிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள நாட்டின் காவல் நிலையங்களுக்கு தொழில்நுட்ப தீர்வையும் கண்டுபிடித்து வருகிறோம். 7 காவல் நிலையங்களைத் தவிர, நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையமும் கணினியுடன் இணைக்கப்பட்டு தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
15 கோடிக்கும் அதிகமாக இ-கோர்ட்டில் வழக்குத் தரவுகள் ஆன்லைனில் தயாரிக்கப்பட்டு, அது இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பேசப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக ஆன்லைன் தரவுகளில் ஏறக்குறைய 2 கோடி கைதிகளின் தரவுகளை இ-சிறை மூலம் பதிவு செய்ய முடிந்தது.
நீதித்துறை செயல்பாட்டில் எத்தனை பிரிவுகள் இருந்தாலும், அவர்களுடன் தடயவியல் அறிவியலை ஒருங்கிணைக்கும் வரை எந்த பலனும் இல்லை. சுதந்திரத்தின் போது, ஆங்கிலேயர்கள் இல்லாமல் இந்தியா எப்படி வாழ முடியும் என்று பலரும் கூறினர். இது உலக அளவில் பெரும் அச்சமாக இருந்தது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மாறி இருக்கிறோம்.
2047 ஆகஸ்ட் 15 அன்று, நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் உயர்ந்ததாக இருக்கும். இது 140 கோடி இந்தியர்களின் தொலைநோக்கு மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும்.
இந்த புதிய 3 சட்டங்களின் முன்பு நான சில சவால்களை காண்கிறேன், அதேசமயம், அடிப்படைக் காவல்துறையின் கொள்கைகளைப் பேணுவதன் மூலம் தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன காவல்துறையாக மாறுவது போன்றது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் மனித இருப்பின் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டாம்” என்றார்.