உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளனர்.
உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
அதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி, முதலிடத்தை பிடித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்த ஜோடி இரண்டாம் இடத்தில் இருந்தது. தற்போது இந்த இணை முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்து முடிந்த மலேஷியா மற்றும் இந்திய ஓபன் போட்டிகளில் இரண்டாவது இடம் பெற்றதன் மூலமாக இவர்கள் தரவரிசை பட்டியலில் உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் முதலிடத்தில் இருந்த சீனாவின் லியாங் வெய்கேங் – வாங் சாங் இணை 2வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 3வது இடத்தில் தென் கொரியா இணை உள்ளது.