ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றையப் போட்டியில் இந்தியா, சிரியா அணியிடம் தோல்வியை தழுவியது.
கத்தாரில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் மொத்தமாக 24 அணிகள் பங்கேற்றுள்ளது.
இதில் ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான கத்தார், சீனா, தஜிகிஸ்தான் மற்றும் லெபனான் அணிகள் பங்குபெற்றுள்ளது. ‘பி’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, சிரியா, உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் பங்குபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் சிரியாவுடன் விளையாடியது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தப் போட்டியில் சிரியா 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெட்டி பெற்றது. லீக் சுற்றுகளில் இந்திய அணி தனது அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.