பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கிய நிலையில், விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி இருக்கிறார்.
கலை மற்றும் கலாச்சாரம், விளையாட்டு, சமூக சேவை, துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல் ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுவரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி ராஷ்டிரீய பால் புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு பல்வேறு கட்ட பரிசீலனைக்குப் பிறகு, மேற்கண்ட துறைகளில் சிறந்து விளங்கிய, 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள், 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த 19 பேருக்கும் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்த சூழலில், விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
தொடர்ந்து, பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகள் வழங்கி பாராட்டினார்.