19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியின் டாஸ் அப்டேட்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய நாள் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை – நம்பியா ; நேபால் – பாகிஸ்தான் ; ஸ்காட்லாந்து – மேற்கிந்திய தீவு ஆகிய நாடுகள் இடையேயான போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் இலங்கை – நம்பியா அணிகளுக்கு இடையேயான போட்டி டி பியர்ஸ் டயமண்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நம்பியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இன்று நடைபெறும் நேபால் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் உள்ள பஃபலோ பார்க் என்ற மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து நடைபெறும் மற்றொரு போட்டியில் ஸ்காட்லாந்து – மேற்கிந்திய தீவு அணிகள் விளையாடுகிறது.
இந்த போட்டி தென் ஆப்பிரிக்காவில் சென்வெஸ் பூங்கா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி முதலில் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி 1:30 மணிக்கு தொடங்குகிறது.