தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.
தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2 மாதங்களாக தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ள நிலையில், வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. இந்த புதிய வரி மாற்றம் ஜனவரி 22ஆம் தேதி முதல் அமல் படுத்தியுள்ளது.
இதில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதம் அளவில் இருக்கும். 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்கம் மற்றும் வெள்ளியை சுத்திகரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 14.35 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில் 10 சதவீதம் அடிப்படை சுங்க வரி மற்றும் 4.35 சதவீதம் விவசாய உள்கடைப்பு மேம்பாட்டு செஸ் அடக்கும். இவற்றுக்கு கூடுதல் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.