மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!
Jul 31, 2026, 01:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்: உ.பி.யில் நாளை தொடங்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து நாளை தொடங்குகிறார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் 3 அடுக்குகளாக மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேக விழா, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை கடந்த ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தையும் உத்தர பிரதேசத்தில் இருந்தே தொடங்க பா.ஜ.க.வினர் முடிவு செய்திருக்கிறார்கள். அதாவது, மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. ஆனால், பா.ஜ.க. இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவில்லை.

எனவே, இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முடித்த கையோடு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்திருக்கின்றனர். அந்த வகையில், உ.பி. மாநிலம் புலந்த்சாஹரில் நாளை பேரணி நடத்த பா.ஜ.க.வினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தப் பேரணியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு தனது மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கவிருக்கிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு உ.பி. மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆகவே, இத்தேர்தலில் அதைவிடக் கூடுதல் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

Tags: PM Modielection compaignUttat Pradesh
ShareTweetSendShare
Previous Post

தங்கம், வெள்ளி நகைகள் மீதான இறக்குமதி வரி உயர்வு! – மத்திய அரசு

Next Post

இராமர் கோவில் விவகாரத்தில் கலவரத்தை உருவாக்கி குளிர்காய நினைக்கும் திமுக! – எல்.முருகன் குற்றச்சாட்டு

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies