தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
தை மாதத்தில் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை, மருத மலை, வயலூர், எட்டுக்குடி முருகன் ஆலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பூச நட்சத்திரத்தில் சூரிய பகவானுக்குத் தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்யப்பட்டது. பக்தர்களும் விளக்குகளை ஏற்றி சூரிய பகவானுக்கு தீபாராதனை காட்டி வழிபாட்டு வருகின்றனர்.
பலரும் காவடி, பால்குடம், அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்ற பாதையாத்திரை சென்றுள்ளனர். இதனால் பழனி நகரமே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி உள்ளது.
காலை 7 மணி வரை சுமார் 50 ஆயிரம் பேர் மலைக் கோயிலுக்குத் தரிசனத்திற்குச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.