புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
Sep 12, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலந்த்ஷாஹரில் ரூ.19,000 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்: தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 01:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரின் இன்று 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் சென்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கின்றன. இந்த சூழலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்கிறார். அங்கு, புலந்த்ஷாஹரில் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மேலும், இதன் மூலம் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களில் இரயில், சாலை, எண்ணெய், எரிவாயு மற்றும் நகர்ப்புற மேம்பாடு, வீட்டுவசதி உள்ளிட்ட முக்கியமான துறைகளுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ​​பிரத்யேக சரக்கு வழித்தடத்தில் (DFC) நியூ குர்ஜா – புதிய ரேவாரி இடையே 173 கி.மீ. நீளமுள்ள இரட்டைப் பாதை மின்மயமாக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த 2 இரயில் நிலையங்களில் இருந்தும் சரக்கு இரயில்களை காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய DFC பிரிவு முக்கியமானது. ஏனெனில், இது மேற்கு மற்றும் கிழக்கு சரக்கு வழித்தடத்திற்கு இடையே முக்கியமான இணைப்பை ஏற்படுத்துகிறது. பிரத்யேக சரக்கு வழித்தடப் பாதையில் சரக்கு இரயில்கள் மாற்றப்படுவதால், பயணிகள் இரயில்களின் இயக்கத்தை மேம்படுத்த இந்தப் புதிய பிரிவு உதவும்.

மேலும், மதுரா – பல்வால் பகுதியையும், சிபியானா புசுர்க் – தாத்ரி பகுதியையும் இணைக்கும் 4-வது பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த புதிய வழித்தடங்கள் தேசிய தலைநகரின் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான இரயில் இணைப்பை மேம்படுத்தும்.

அதேபோல, பிரதமர் மோடி பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அலிகார் முதல் பத்வாஸ் வரை 4 வழிச்சாலை பணி, மீரட் முதல் கர்னால் வரையிலான எல்லையை விரிவுபடுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் ஷாம்லி – முசாபர்நகர் பகுதியை 4 வழிப்பாதையாக்குதல் ஆகியவையும் இத்திட்டங்களில் அடங்கும்.

நிகழ்ச்சியின்போது, ​​இந்தியன் ஆயிலின் துண்ட்லா – கவாரியா பைப்லைனையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும், கிரேட்டர் நொய்டாவில் ஒருங்கிணைந்த தொழில்துறை நகரத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

மாலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்குச் செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை வரவேற்கிறார். தொடர்ந்து, ஜந்தர் மந்தர், ஹவா மஹால் மற்றும் ஆல்பர்ட் ஹால் அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

Tags: PM Modiuttar pradeshRajastan
Share
Tweet
SendShare
Previous Post

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றுவருகிறது !

Next Post

மக்களவைத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்: மத்திய அமைச்சர் உறுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies