டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
20 ஆண்டு காலமாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதிய நிர்ணயம், இஎஸ்ஐ மருத்துவ வசதி, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் டி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்க நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்ப்பட்ட அவர்கள், நேற்று இரவு விடுவிக்கப்பட்டனர்.