குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை என்பதால், சென்னை புறநகா் மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என்று சென்னை இரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – சூலூா்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையேயான மின்சார இரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் படி இயக்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம், பொன்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் வரும் 27, 28-ஆம் தேதிகளில், பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இந்த வழித்தட்டத்தில் இரவு 9.05 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை புறநகா் ரயில்கள் இருமார்க்கத்திலும் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மேலும், வரும் 27-ஆம் தேதி திருத்தணி – அரக்கோணம் இடைய இயக்கப்படும் இரவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை இரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.