தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பத்திரிகையாளர்கள் விடுத்துள்ள புறக்கணிப்பு அழைப்பை வெளியிட வற்புறுத்தினால் அது கருத்து சுதந்திரத்தை மீறும் என்று மாலினி பார்த்தசாரதி வலியுறுத்தி உள்ளார் .
பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையை “புறக்கணிக்க” சில ஊடகங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ‘புறக்கணிப்பு’ மற்றும் ‘இருப்பு’ அழைப்புகளில் “தி இந்து” நாளிதழ் முன்னணியில் உள்ளது.
இந்து பத்திரிக்கையின் இந்த செயலுக்கு அதன் முன்னாள் ஆசிரியரும், முக்கிய பங்குதாரருமான மாலினி பார்த்தசாரதி, அண்ணாமலைக்கு எதிரான இந்து பத்திரிக்கையின் ‘சார்பு’’ மற்றும் அதன் தப்பான முன் தீர்மானம் கொண்ட ‘செய்தி அறிக்கைகள்’ வெளியிட்டதற்காக கடுமையாக பதிவிட்டுள்ளார் .
As a major stakeholder @the_hindu , I am again compelled to call out the outrageous bias & prejudice that masquerade as news reports on our pages.
The attack on the TN BJP chief @annamalai_k by a group of journalists in Chennai, especially the call to black out coverage of him,… pic.twitter.com/zGe8Quzvnv— Malini Parthasarathy (@MaliniP) January 26, 2024
“ஒரு முக்கிய பங்குதாரராக @the_hindu, எங்கள் பக்கங்களில் செய்தி அறிக்கைகளாக வெளிப்படும் மூர்க்கத்தனமான சார்பு மற்றும் முன் தீர்மானம் கொண்டவிஷயத்தில் மீண்டும் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். TN BJP தலைவரான @annamalai_k மீது சென்னையில் ஒரு குழு பத்திரிக்கையாளர்கள் நடத்திய தாக்குதல், குறிப்பாக அவரைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ய அழைப்பு விடுத்தது, எந்த ஒரு புகழ்பெற்ற செய்தி நிறுவனத்தாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்துள்ளார்.
புறக்கணிப்பு அழைப்புகளை வெளியிட கட்டாயப்படுத்தினால் அது கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாகவும் அவர் வலியுறுத்தினார். மேலும், அயோத்தி ராமர் கோவில் குறித்து செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது மதுரை காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை கண்டிக்காத அண்ணாமலைக்கு எதிராக போராடும் போலி போராட்ட பத்திரிகையாளர்களின் பாசாங்குத்தனத்தை மாலினி பார்த்தசாரதி கடுமையாக சாடி இருக்கிறார்.