அமெரிக்க பெண் எழுத்தாளர் தொடர்ந்த வழக்கில் 690 கோடி இழப்பீடு வழங்க டிரம்புக்கு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் என்ற எழுத்தாளர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப் ஜீன் கரோலை விமர்சித்து பல்வேறு பதிவுகளை வலைதளத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து 10 மில்லியின் டாலர் இழப்பீடு வழங்க கோரி டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இனறு தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நீயூயார்க் நீதிமன்றத்தில் ஆஜரான டிரம்ப் தீர்ப்பை வாசிப்பதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றார்.
பின்னர் தீர்ப்பு வழங்கிய நீதபதிகள், எழுத்தாளர் ஜீன் கரோலுக்கு நஷ்ட ஈடாக டொனால்டு டிரம்ப் 690 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். எழுத்தாளர் ஜீன் கரோல் கேட்டதை விட சுமார் 10 மடங்கு அதிக தொகையை இழப்பீடாக வழங்க டிரம்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.