ஈராக்கில் "மாஸ்" மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!
Sep 13, 2026, 12:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை: மனித உரிமை அமைப்பு கண்டனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 27, 2024, 03:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈராக்கில் “மாஸ்” மரண தண்டனை நிறைவேற்றப்படுவது தொடர்கதையாகி இருக்கும் நிலையில், பல்வேறு குற்றச்செயல்களில் தண்டனை விதிக்கப்பட்ட 13 சிறைக் கைதிகளுக்கு திடீரென ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ஈராக் நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றும் ஒரே சிறையாக தெற்கு மாகாணத்தில்  உள்ள நசிரியா சிறை இருந்து வருகிறது. இந்த சிறையில் பல முறை “மாஸ்” மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 2017-ம் ஆண்டு 3 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில், முறையே 41 மற்றும் 38 பேர் கொண்ட 2 வெகுஜன மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

இதன் காரணமாக, ஈராக்கியர்கள் நசிரியா சிறையை “அல் ஹவுட்” அல்லது திமிங்கலம் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில், திமிங்கலம் மீன்களை விழுங்குவது போல இச்சிறை மக்களை விழுங்குகிறது. எனினும், 2020-ம் ஆண்டு முதல் இதுபோன்ற வெகுஜன மரண தண்டனைகள் படிப்படியாகக் குறைந்து வந்தன. இது ஆறுதல் அளிப்பதாக இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் வெகுஜன மரண தண்டனை அரங்கேறத் தொடங்கி இருக்கிறது.

அதாவது, ஈராக்கில் பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட சுமார் 8,000 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.  கடந்த 25-ம் தேதி நசிரியா சிறையில் 13 கைதிகளுக்கு மாஸ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல்நாள் மாலை ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு மறுநாள் அதிகாலையிலேயே மரண தண்டனையை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

முன்பெல்லாம், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பிறகு, நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்தனர். ஆனால், தற்போது திடீரென 13 சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இதுகுறித்து நசிரியா சிறையில் உள்ள கைதி ஒருவர் தனது வழக்கறிஞரிடம்,  “தூக்கிலிடப்படவிருக்கும் 13 பேரின் பெயர்கள் 24-ம் தேதி மாலை சிறையின் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது. மறுநாள் அதிகாலையில் அதிகாரிகள் தூக்கிலிட்டு விட்டனர். மேலும், அவர்கள் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவர்களது குடும்பத்தினரையோ அல்லது வழக்கறிஞர்களோ அழைக்க அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதனிடையே, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஈராக் ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறுகையில், “ஈராக்கில் வெகுஜன மரண தண்டனைகள் புதுப்பிக்கப்படுவது ஒரு மோசமான வளர்ச்சியாகும். ஈராக் அரசாங்கம் உடனடியாக மரண தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஈராக்கிய ஊடகம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், “ரகசிய மரண தண்டனைகள்” என்று தெரிவித்திருக்கிறது. மேலும், வெளிப்படைத்தன்மை அல்லது முன்னறிவிப்பு இல்லாமல் மரண தண்டனைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றும் தெரிவித்திருக்கிறது.

Tags: iraqUnlawfullMass ExecutionsResume
Share
Tweet
SendShare
Previous Post

டிரம்புக்கு எதிராக எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு : 690 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு! 

Next Post

உங்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: பிரதமரை புகழ்ந்த புதுவை முதல்வர்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies