சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய சுதந்திரத்திற்கு காரணம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தனது பேச்சு தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை அளித்துள்ளார்.
அதில், காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டி என தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியை நான் அவமதிக்கவில்லை என்றும், தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பை போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதையே விளக்க முயன்றேன்.
தனது உரையை தவறாக திரித்து சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.