ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை துண்டிப்பதை தவிர வேறு வழியில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணி கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் பாட்னாவில் ஆளுநரை சந்தித்த நிதிஷ்குமார் தமது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆட்சியைக் கலைக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன்.
பீகாரில் ஆளும் கூட்டணிக்குள் நிலைமை சரியில்லாததால் இந்த நிலை வந்தது. இந்த முடிவுக்கு வருவதற்கு முன் அனைவரின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டேன். அவை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டேன். இன்று அரசாங்கம் கலைக்கப்படுகிறது என தெரிவித்தார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கூட்டணி, பதற்றமான நீரில் பயணித்தது. பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் ஒன்றிணைந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி எங்கள் முக்கிய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டோம்.
இறுதியில் நாங்கள் பிரிந்துவிட்டோம், பேசுவதைக் கூட நிறுத்திவிட்டோம். ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் உடனான கூட்டணியை துண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என நிதிஷ் குமார் கூறியுள்ளார்.