உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப்பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
இந்நிலையில், கான்பூரில் உள்ள ராம் ஜானகி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவில் சுவர்களில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சுவரொட்டிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் சுவர்களில் மிரட்டல் கடிதங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்தத போது மிரட்டல் சுவரொட்டிகள் தரையில் சிதறி கிடந்ததன. இதுகுறித்து போலீசுக்கு தகவல் அளித்தேன். கோயில் கதவுகளை மூடிவிட்டு போலீஸ் தடுப்புகளை வைத்துள்ளதாக கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.