இண்டி கூட்டணியில் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் முரண்பாடுகள் உள்ளது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை வெள்ளலூர் பகுதியில் சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்ட, ரேக்ளா மாட்டு வண்டி பந்தய விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார்.
இவ்விழாவில், வெற்ற பெற்றவருக்கு பரிசுகளை அண்ணாமலை வழங்கினார். இந்த விழா தமிழக பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழ பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் AP முருகானந்தம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
காங்கிரஸ் திமுக கூட்டணி அரசால் நமது பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் உள்ளிட்டவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசால் விலக்கபட்டதன் மூலம், தமிழகத்தில் மீண்டும் நமது கலாச்சார விளையாட்டுகள் சிறப்பாக நடைபெறுவதைப் பார்க்கும்போது, மிகுந்த பெருமிதத்தைத் தருகிறது.
கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடக்க காரணம் மோடி தான். 2006ம் ஆண்டு ரேக்ளா போட்டிக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டு மிரண்டி விளையாட்டு என்றார்.
காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்தார்கள். அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின்.
காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பா.ஜ.க, அரசு காளையை நீக்கியது. மத்திய பா.ஜ, அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தடைக்கு காரணமாக இருந்த கருணாநிதி பெயரை ஏறு தழுவுதல் மைதானத்திற்கு வைக்க கூடாது.
முரண்பாடு இல்லாதவர்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். இண்டி கூட்டணியில் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் முரண்பாடுகள் உள்ளது. இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்னையை நிதீஷ்குமார் வெளியேற காரணம். இண்டியா கூட்டணி ஆரம்பிக்கவும், மற்ற கட்சிகளை சேர்க்கவும் காரணம் நிதீஷ்குமார் தான். அவரே வெளியே வந்துள்ளார். இது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது.
மாநாட்டில் திருமாவளவன் போட்ட தீர்மானங்கள் எல்லாம் பச்சை பொய். 2, 3 சீட்டுக்காக நாடகம் போட்டுள்ளார். சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை. அவர் ஒரு அரசியல் வியாபாரி. முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., வை கண்டால் பயம். பா.ஜ., இப்படி, அப்படி என பேசுவது தான் அவர் வேலை. களத்தில் வியர்வையை சிந்தி நாங்கள் வேலை செய்கிறோம்.
கள நிலவரம் என்ன என எங்களுக்கு தெரியும். 2024 தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் கருத்து பற்றி பேசிக் கொள்ளலாம். எங்கள் கட்சிக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். பங்காளி, பகையாளி என்பவர்கள் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கட்டும். பல கோவில் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இது ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும் எனத் தெரிவித்தார்.
போட்டியில் முதல் பரிசாக மாருதி ஆல்டோ கார் மற்றும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் KP ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.