உத்தரமேரூர் மேற்கு ஒன்றியத்தில் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களில், அதிமுக, திமுக, பாமக, விசிக, உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட தலைவர்- கே.எஸ்-பாபு, முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மாவட்டத் துணைத் தலைவர் சோழனூர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தல் பணிக்கான ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.
பாஜகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து புதிய அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு பேசுகையில்,
உத்தரமேரூர் தொகுதிகளில் அதிமுக-திமுக கூடாரங்கள், காலியாகி வருகின்றன.
மத்திய பாஜக-வின் மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து, மில்லியன் கணக்கானவர்களை உள்ளடக்கிய வளர்ச்சியை யதார்த்தமாக்குவதற்காக, பெண்களுக்கு அதிகாரமளிப்பதை அதன் நிர்வாக அணுகுமுறையின் மைய தூணாக மாற்றியுள்ளது.
பாலின பட்ஜெட் அறிக்கையின் கீழ் பெண்கள் முன்னேற்றத்திற்கு
பல கோடிகளை ஒதுக்குவதுடன், பாலின இடைவெளியைக் குறைப்பதற்கும், பெண்களின் அதிகாரத்தை வளர்ப்பதற்கும் சில முக்கிய முயற்சிகளை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முன்னெடுத்துள்ளது.
பல்வேறு வாழ்வாதாரம் மற்றும் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளுக்காக
ஏழைப் பெண்களுக்கு சலுகை அடிப்படையில் சிறுகடன் வழங்க ராஷ்ட்ரிய மகிளா கோஷ் தொடங்கப்பட்டது.
பெண்கள் நிலையான நிதி சுதந்திரத்தை அடைய உதவும் மற்றொரு முயற்சியாகும். பெண்களுக்கான பஞ்சாயத்து ராஜ் மற்றும் பிற உள்ளூர் தேசிய நிறுவனங்களில்- 33% இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படுவதன் மூலமும், பணிபுரியும் பெண்களுக்கு- 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை உறுதி செய்வதன் மூலமும் (உலகளாவிய ரீதியில் மிக அதிகமாக) அரசாங்கம் இந்தியப் பெண்களுக்கும் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும், தொலை நோக்கு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாகவும்,
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
நிகழ்வின் போது- காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலாளர்- ருத்ரகுமார்,
மாவட்டத் துணைத் தலைவர் ஜம்போடு ஷங்கர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாவட்ட தலைவர் பொன்மொழி, ஒன்றிய துணைத் தலைவர் கோதண்டராமன்,
மண்டல தலைவர் மனோகரன், ஊடகப்பிரிவு செயலாளர்-சேகரன், உள்ளிட்ட உத்தரமேரூர் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த -பாஜக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.