உத்தரப்பிரதேசத்தில் 813 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில அரசு , சாலைகள் அமைப்பதிலும், பலப்படுத்துவதிலும் பிளாஸ்டிக் கழிவுகள், குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இது செலவு குறைவு, அதே நேரத்தில் சாலையின் ஆயுளையும் உறுதி செய்யும் வகையில், முன்மாதிரியாக மாறியுள்ளது. மேலும், இந்த செயல்முறையின் மூலம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவது ஊக்குவிக்கப்படுகிறது.
பொதுப்பணித் துறையின் புள்ளிவிவரங்களின்படி, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 813 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை இந்த செயல்முறையின் மூலம் நிர்மாணித்து பலப்படுத்தியுள்ளது. இந்த புதுமையான முயற்சியின் மூலம் மொத்தம் 466 சாலைகள் மற்றும் வழித்தடங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சராசரியாக தினமும் ஒரு சாலையும், மூன்று நாட்களுக்கு ஒரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. உலக வங்கி வலைப்பதிவுகளின் அறிக்கையின்படி, நெகிழியிலிருந்து சாலைகள் தயாரிப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2500 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் மூலம் சாலைகள் அமைக்கும் இந்த செயல்முறை அமெரிக்கா உட்பட 15 நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு மொத்தம் 813 கிலோமீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் சாலைகளை அமைத்து,நாட்டில் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளது.
2023-24 நிதியாண்டில் சாலைகளில் உள்ள 567 கரும்புள்ளிகளை அகற்ற ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 9 கிலோமீட்டர்கள் என்ற விகிதத்தில் விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்தும் பணியை மாநிலம் செய்து வருகிறது.