தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தது முதல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அடைந்து வருகிறது. இதனை தக்க ஆதாரங்களோடு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் மன்றத்தில் வைத்து வருகிறார்.
அதேவேளையில், அரசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விண்ணை முட்டும் அளவு விலைவாசி ஏறி வருகிறது. இதனால், ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பாவி பொது மக்களும், வணிகர்கள் சங்க நிர்வாகிகளும் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை மவுனமே காத்து வருகிறது.
இந்த நிலையில், பொது மக்களின் கஷ்டத்தைப் போக்கும் வகையில், மிகக் குறைவான விலையில், தரமான பருப்பு கிடைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பிரிவான இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎப்) சார்பில், தமிழகம் முழுவதும், பாரத் பிராண்ட் என்ற பெயரில் தரமான பருப்பு வகைகளை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், 50 நடமாடும் வேன்கள் மூலம் முக்கிய இடங்களில் பாரத் பருப்பு மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில், கோதுமை, அரிசி போன்ற உணவுப் பொருட்களும் குறைவான விலையில், தரமாக விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில், விலைவாசி உயர்வை நிலைப்படுத்தவும், உணவுப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு பங்களிப்பை அதிகரிக்கவும் உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் பாரத் பிராண்ட் திட்டத்தைப் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.