கேரள ஆளுநர் மாளிகையில் மத்திய ரிசர்வ் போலீஸ்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக செல்கிற வேளையில் கொல்லம் நில்லமேலியில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் எஸ்எப்ஐ (SFI) மாணவர் அமைப்பு ஈடுபட்டது .
இதை கண்ட ஆளுநர் ஆரிப் முகமது கான் உடனடியாக தனது கான்வாய் வாகனங்களை நிறுத்தச் சொல்லி காரில் இருந்து இறங்கி மாணவர்களுக்கு எதிராக முழக்கமிட்டு அவர்களை அப்புறப்படுத்த சொல்லி காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்து அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், கேரள ஆளுநர் மாளிகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள போலீசாருக்கு பதிலாக சிஆர்பிஎப் களம் இறக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கவர்னரின் வெளிப்புற நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பு மற்றும் கூட்டத்தை நிர்வகிக்கும் பணிகளில் மாநில காவல்துறை தொடர்ந்து செயல்படும்.