கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பல் சுமித்ரா மீட்டது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவின் விரைவான பதிலடியால் கடத்தப்பட்ட கப்பல் மற்றும் அதன் பணியாளர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படை போர்க்கப்லுக்கு, ஈரானின் கொடியுடன் கூடிய மீன்பிடி கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றது தொடர்பாக செய்திகிடைத்தது.
உடனே மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ரா விரைந்து சென்று கடத்தப்பட்ட கப்பலையும் அதன் பணியாளர்களையும் பாதுகாப்பாக விடுவித்தது.
இது குறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில்,
சோமாலியாவின் கிழக்குக் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் ஈரானியக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான இமான் கடத்தப்பட்டது தொடர்பான செய்தி அறிந்து, கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐஎன்எஸ் சுமித்ரா ஈடுபட்டது. படகுடன் கூடிய குழுவினரை பாதுகாப்பாக விடுவித்ததாக கூறினார். இதன் மூலம் 17 பணியாளர்கள் மற்றும் கப்பல் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.