U-19 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

U-19 உலகக்கோப்பை : சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்!

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சூப்பர் 6 சுற்று அட்டவணை.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

அதன்படி குரூப் ஏ-ல் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளும், குரூப் சி-ல் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே அணிகளும், குரூப் டி-ல் பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் முன்னேறி உள்ளன.

இந்நிலையில் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறி உள்ள 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ மற்றும் டி அணிகள் ஒரு பிரிவாகவும், குரூப் பி மற்றும் சி அணிகள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

சூப்பர் 6 சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடும். அதன்படி குரூப் ஏ-ல் முதல் இடம் பிடித்த இந்திய அணி குரூப் டி-யில் 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்த நியூசிலாந்து, நேபாளம் அணிகளுடன் விளையாடவுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து போட்டி நாளையும், இந்தியா – நேபாளம் போட்டி பிப்ரவரி 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

சூப்பர் 6 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். அரையிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும், இறுதிப்போட்டி பிப்ரவரி 11ஆம் தேதியும் நடைபெறுகின்றன.

Tags: Cricketu 19 world cupU-19 World Cup: Qualified Teams for Super 6 Round!
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : இன்றையப் போட்டியின் விவரம்!

Next Post

தமிழக மீனவர்கள் விடுதலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies