கொமோரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அசாலி அசோமனிக்கு (Azali Assoumani) பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் கிழக்கு முனையில், வடக்கு மடகாஸ்கர் மற்றும் வடகிழக்கு மொசாம்பிக் அருகே கொமொரோஸ் நாடு அமைந்துள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது சிறிய நாடு மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தில் மக்கள் தொகை அடிப்படையில் ஆறாவது சிறிய நாடாக உள்ளது.
இந்நாட்டின் அதிபராக அசாலி அசோமனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஆப்பிக்க ஒன்றியத்தின் தலைவராக உள்ளார்.
கொமோரோஸ் நாட்டின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அசாலி அசோமனிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கொமோரோஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அசாலி அசோமானிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா – கொமோரோஸ் கூட்டாண்மை, இந்தியா – ஆப்பிரிக்கா கூட்டாண்மை மற்றும் ‘விஷன் சாகர்’ ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.