அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை... உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?
Jul 24, 2025, 03:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை… உண்மையில் அனுமதி வழங்கியதா தமிழக அரசு?

Web Desk by Web Desk
Jan 31, 2024, 08:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக காவல்துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவை பார்க்கும்போது, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் தமிழக அரசு உண்மையிலேயே அனுமதி அளித்ததா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்தார். அதேசமயம், கும்பாபிஷேகத்தைக் காண பக்தர்கள் யாரும் கோவிலுக்கு நேரில் வரவேண்டாம். பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி நாடு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

ஆகவே, அவரவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுமாறும், வீடுகளில் இராம ஜோதி ஏற்றி வழிபடுமாறும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் அயோத்தி கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்ய தமிழக பா.ஜ.க. தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

ஆனால், கோவில்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. செயலாளர் வினோஜ் பி செல்வம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அயோத்தி இராமர் கோவிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் ஒளிபரப்ப தடை விதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக உத்தரவிட்டிருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கடந்த ஜனவரி 21-ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது. அச்செய்தியில், அயோத்தி இராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது.

கோவில் நிர்வாகம் சார்பிலோ, பக்தர்கள் பெயரிலோ, அமைப்புகள், கட்சிகள் பெயரிலோ எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. அதை விளம்பரப்படுத்தக் கூடாது. அன்னதானம் உள்ளிட்ட செயல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல, இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையை மாநிலத்தின் பொது இடங்களில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்புவதைத் தடுக்க தமிழக காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக காவல்துறை டி.ஜி.பி. உயர் நீதிமன்றத்தில் அலித்த தனது பதில் வாக்குமூலத்தில், அரசுக்கு எதிரான மனுக்கள் ஆதாரமற்றவை என்றும், பிரான் பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், மேற்கண்ட மனு தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசுவதாகவும், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும் காவல்துறை டி.ஜி.பி. விளக்கம் அளித்திருந்தார். அதோடு, அந்த ரிட் மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், டி.ஜி.பி. அளித்த பிரமாணப் பத்திரத்தில் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற கதையாக இருப்பதுதான் வேடிக்கை. காரணம், அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் 288 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அவற்றில் 146 மனுக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், 138 மனுக்கள் பரிசீலனைக்காக பெண்டிங்கில் வைக்கப்பட்டிருப்பதாகவும், 4 மனுக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் அயோத்தி நிகழ்ச்சியை தமிழகத்தில் ஒளிபரப்ப தமிழக அரசும், தமிழக காவல்துறையும் அனுமதி மறுத்தது அம்பலமாகி இருக்கிறது.

Tags: policetamilnadu governerAyodyaPran Pratishta
ShareTweetSendShare
Previous Post

கடல் கொள்ளையர்களை விரட்டும் இந்திய கடற்படை : யார் இவர்கள் ?

Next Post

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies