நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!
Oct 6, 2025, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் : ஜே.பி.நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்!

இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Jan 30, 2024, 05:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் அக்கட்சியின் தேசிய  பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. குறிப்பாக வரும் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள்  தெரிவிக்கின்றன.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாட்டு  பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி குறித்த  பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் அவரது இல்லத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.  இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

பாஜக பிப்ரவரி 4 முதல் 11 வரை  ‘காவ் சலோ அபியான் இயக்கத்தை நடத்தவுள்ளது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பாஜக தொண்டர்கள் சொந்த மாவட்டங்களில்  இருந்து வெளி மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளுக்கு அனுப்பப்படவுள்ளனர். சுமார் 7  லட்சம் கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்து சாவடிகளிலும் 24  மணிநேரமும் அவர்கள் செலவழிக்க பணிக்கப்படுவார்கள்.

பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் தொண்டர்களை’பிரவாசி காரியகர்த்தா’ என,  கட்சி மேலிடம் அழைக்கிறது. மத்தியிலும்  மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களிலும்  பாஜகவின் வளர்ச்சிப் பணிகளை சுட்டிக்காட்டி, பொதுமக்களின் நம்பிக்கையைப்  பெறுவதற்கு உதவும் பணி இந்த காரியகர்த்தாக்களிடம் ஒப்படைக்கப்படும்.

அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பாஜகவுக்கு மக்களுடனான தனது ஈடுபாட்டை  ஆழப்படுத்தவும், முக்கியமான பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அவர்களின்  நம்பிக்கையையும்,  ஆதரவையும் பெறவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Gaao Chalo Abhiyanbjpbjp naddaparliment electionLok Sabha elections.BJP National President
ShareTweetSendShare
Previous Post

மகாத்மா காந்திஜியின் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்திகள் இன்றைக்கும் பொருந்தும்! – அமித் ஷா

Next Post

சக ஆசிரியர்களைச் சுட்டுக் கொன்ற ஆசிரியர்! – ஜார்கண்டில் அதிர்ச்சி!

Related News

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies