டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் பனி சிறுத்தை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இன்று தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியாவில் பனிச்சிறுத்தைகளின் நிலை குறித்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டார்.
அதில், “இந்தியாவில் பனி சிறுத்தை தொகை மதிப்பீடு (SPAI) திட்டதின் முதல் அறிவியல் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளது என்பதை கணக்கெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
லடாக், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், இமயமலை, உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய , பகுதிகளில் சுமார் 120,000 கிமீ 2 பகுதியை பனிச்சிறுத்தை தன் வாழ்விடமாக கொண்டுள்ளது.
மேலும் இந்த தரவுகளின் படி லடாக்கில் 477 பனி சிறுத்தைகள் , உத்தரகாண்ட்டில் 124 பனி சிறுத்தைகள் , இமாச்சலப் பிரதேசத்தில் 51 பனி சிறுத்தைகள், அருணாச்சலப் பிரதேசத்தில் 36 பனி சிறுத்தைகள், சிக்கிமில் 21 பனி சிறுத்தைகள், மற்றும் ஜம்மு காஷ்மீர்ரில் 9 பனி சிறுத்தைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.