கடத்தப்பட்ட கப்பல் பணியாளர்களுக்கு உதவிய இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஏடன் வளைகுடா கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய மீன்பிடி கப்பலுக்குள் கடற்கொள்ளையர்கள் புகுந்த நிலையில், அதிரடியாக சென்ற இந்திய கடற்படை கடற்கொள்ளையர்களை விரட்டி கப்பலை மீட்டனர்.
சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 19 பேரை மீட்டது இந்திய போர்க் கப்பல் மீட்டது.
இப்படி தொடர்ச்சியாக பல கொள்ளையர்களை விரட்டி வரும் இந்திய கடற்படை மார்கோஸ் பற்றி பார்ப்போம்.
மார்கோஸ் என்பது இந்திய கடற்படையின் சிறப்புப் படை ஆகும். இந்தப் படைகள் கடல் சார்ந்த சிறப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாவர்.
மார்கோஸ் படை பிப்ரவரி 1987-இல் நிறுவப்பட்டது. இப்படைகள் நீர், நிலம் மற்றும் வான் வெளிகளில் போரிடும் பயிற்சியும், ஆற்றலும் பெற்றது.
மார்கோஸ் படைகளின் பயிற்சிகள் மிகவும் கடினமானவை மற்றும் மிக நீண்ட காலம் நீடிக்கும். இந்தப் பயிற்சிகளில், மார்கோஸ் வீரர்கள் நீச்சல், தற்காப்புக் கலைகள், தகவல் தொடர்பு, உயிர்வாழ்தல் மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுகிறார்கள்.
அதேபோல் இவர்கள் காஷ்மீர் போன்ற பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ராணுவத்துடன் கூட்டு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.
1980 களின் பிற்பகுதியில், இலங்கை உள்நாட்டுப் போருக்கு மத்தியில் மார்கோஸ் ‘ஆபரேஷன் பவன்’ என்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
” அஞ்சாமை ” என்பதே இவர்களின் குறிக்கோளாக உள்ளது. மார்கோஸ் படைகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், கடற்படை கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. மார்கோஸ் படைகள் பல சர்வதேச பயிற்சிகளில் பங்கேற்றுள்ளன.
மார்கோஸ் படைகள் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த சிறப்புப் படைகளில் ஒன்றாகும். இந்தப் படைகள் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், தேசிய நலனுக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.
2008 இல் தாஜ் ஹோட்டல் தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் MARCO களும் உதவியதாக MyGov இல் ஒரு அறிக்கை கூறுகிறது .