வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்
Mar 15, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது!- குடியரசுத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 31, 2024, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  உரையுடன் தொடங்கியது. இன்று முதல் வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நாளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை, இடைக்கால பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் பதிலுடன் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஆகியவையே இந்த சுருக்கமான அமர்வின் முக்கிய நிகழ்ச்சியாக அமையும்.

நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை,  

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.

இந்தியாவில் நிதி பற்றாக்குறை குறைந்துள்ளது. ஆண்டு வருவாய் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. நாடு முழுவதும் வங்கிகளின் வராக்கடன் 4% ஆக குறைந்துள்ளது. உலக அளவில் நெருக்கடி இருந்தபோதும் பணவீக்கத்தை இந்த அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. உலகின் ஐந்து பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா ஒன்றாக வளர்ந்துள்ளது. செல்போன் உற்பத்தியில் உலகின் 2-வது நாடாக இந்தியா மாறியுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளது. 1 லட்சம் கோடி அளவுக்கு தினசரி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. யுபிஐ பரிவர்த்தனைகள் 1,200 கோடி அளவுக்கு நடைபெறுகிறது. உலக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் பங்கு 46% ஆக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறித்து உலகம் முழுவதும் பெருமையாக பேசப்படுகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இத்தகைய நவீன டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இல்லை.

தமிழ்நாட்டில் பாதுகாப்புத்துறை உற்பத்தி மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பர் பாரத்’ ஆகிய திட்டங்கள் நமது நாட்டின் பலமாக உள்ளது.

அதேபோல் நாட்டின் 20 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைமுறையில் உள்ளது. ரயில்வே துறையை முழுக்க முழுக்க மின்மயமாக மாற்றும் பணி விரைவில் நடைபெறவுள்ளது. இல்லங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் பணி விரைவில் முடியவுள்ளது.

கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கிமீ என்பதில் இருந்து 1.46 லட்சம் கிமீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா 4 சக்திகளை கொண்டு இயங்கி வருகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழை மக்களே இந்த நாட்டின் தூண்கள். இந்த நான்கு தூண்களை வலுப்படுத்தும் பணியில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது.

கரோனா பேரிடர் பாதிப்பிலிருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுவந்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 3 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கும் விமானப் பயணம் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. ஏழை பெண்களுக்கு ரூ.7 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. விவசாய கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் முன்னேற்றத்துக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது. கிசான் சம்மன் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு சுமார் ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர் கிராமங்களுக்கும் 4ஜி தொலைத்தொடர்பு சேவை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்கு ஊக்கமளிக்க தனித்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. திருநங்கைகளுக்கு சமூகத்தில் கவுரவமான இடத்தை வழங்கவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் தனிச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீவிரவாதம் போன்ற செயல்களுக்கு நமது படைகள் பதிலளித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. நாட்டில் நக்சல் வன்முறையும் குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் இன்று பாதுகாப்பான சூழல் நிலவுகிறது.
உற்பத்தி துறையில் இந்தியா முக்கிய இடம் வகிக்கும் என்று உலக நாடுகள் நம்புகின்றன. சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகின்றன.

நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பதால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். மேட் இன் இந்தியா உலகளவில் பிராண்டாக மாறியுள்ளது. விண்வெளி திட்டங்களிலும் உலக அளவில் இந்தியா சக்திவாய்ந்த நாடக மாறியுள்ளது.

பழங்குடியின குடும்பங்கள் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு பெறுகின்றனர். பழங்குடியினரை அதிகம் பாதிக்கும் ரத்த சோகை நோயை தடுக்க தனித் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை: ஒருநாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க பொருளாதார வளர்ச்சியை விட சமூக வளர்ச்சியே முக்கியம். புதிய கல்விக்கொள்கை மூலம் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மாநில மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த அரசின் நடவடிக்கையால் வெகுவாக குறைந்துள்ளன. இந்திய இளைஞர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் நாடு முழுவதும் 84 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இளைஞர்களின் திறன், வேலைவாய்ப்புடன் இணைக்கும் வகையில் விளையாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறோம். ஏழை நாடுகளின் குரலாக இந்தியா ஒலித்து வருகிறது. உலகின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது.

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பால ராமரை 5 நாட்களில் 13 பேர் தரிசித்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

Tags: President Draupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

மீண்டும் வருகிறது ‘ராமாயணம்’ தொடர்!

Next Post

பக்தர் மண்டை உடைப்பு – பழநியில் பரபரப்பு!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies