பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை... கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Jan 14, 2026, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பா.ஜ.க. தலைவர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்கு தண்டனை… கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 31, 2024, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பா.ஜ.க. தலைவர் ரஞ்சித் சீனிவாஸ் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கேரள மாநிலம் மாவேலிக்கரை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் சீனிவாஸ். வழக்கறிஞரான இவர், பா.ஜ.க. பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வீட்டில் இருந்த ரஞ்சித் சீனிவாஸை, அவரது மனைவி, மகள் மற்றும் தாய் முன்னிலையில் ஒரு கும்பல் வீடு புகுந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.

இக்கொலை சம்பவம் கேரள மாநிலம் மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) மற்றும் சோசியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மேற்கண்ட அமைப்புகளைச் சேர்ந்த நிஜாம், அஜ்மல், அனூப், முகமது அஸ்லாம், அப்துல்கலாம் என்ற சலாம், அப்துல் கலாம், சபரூதின், மன்சாத், ஜசீப் ராஜா, நவாஸ், சமீர், நஸீர், ஜாஹீர் உசேன், ஷாஜி, ஷெர்னாஸ் அஷரப் ஆகிய 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை, கூட்டுச் சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கேரள மாநிலம் மாவேலிக்கரை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

அதன்படி, குற்றவாளிகள் 15 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு தகுதியற்றவர்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags: KeralaMurder caseBJP leader15 accusedsentenced to death
ShareTweetSendShare
Previous Post

அகிலேஷ் மனைவி டிம்பிள் மெயின்புரி தொகுதியில் போட்டி! – 16 சமாஜ்வாதி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 7 வரை நீட்டிப்பு! – சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies