இமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் மலைப்பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. அரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு இருக்கக்கூடும்.
பஞ்சாப் மற்றும் அரியானாவில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும். டெல்லியின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தலைநகர் டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் இன்று கடுமையான குளிர் மற்றும் மூடுபனி தொடர்ந்து நீடிக்கிறது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
பஞ்சாப், அரியானாவில் ஒரு சில பகுதிகளில் மிகவும் அடர்த்தியான மூடுபனி பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் மேற்கு உத்தரபிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில், மிதமான மூடுபனி காணப்பட்டது.
கடந்த சில வாரங்களாக கடும் குளிரை சந்தித்து வரும் டெல்லியில், கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலை மற்றும் இரண்டாவது குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலை இந்த ஜனவரியில் பதிவாகியுள்ளது.
வரும் 4-ஆம் தேதி வரை மேற்கு இமயமலைப் பகுதி மற்றும் அதை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில், மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.