வாரணாசி, ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் இன்று காலை பூஜை தொடங்கியது.
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து வாரணாசி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஞானவாபி மசூதியை சுற்றிலும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை ஞானவாபி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வியாஸ் ஜி அடித்தளத்தில் தடுப்புகள் திறக்கப்பட்டு, தினசரி ஆரத்தி மற்றும் அதிகாலை பூஜைகள் நடைபெற்றன.
இதை ஸ்ரீ ராம்லாலாவின் கும்பாபிஷேகத்திற்கான உகந்த நேரத்தை நிர்ணயித்த விஸ்வநாதர் கோவிலின் அர்ச்சகர், பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா மற்றும் ஆச்சார்யா கணேஷ்வர் டிராவிட் ஆகியோர் பூஜையைத் தொடங்கினர்.
இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுனர்.
இது குறித்து இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் கூறுகையில், மங்கள ஆரத்தி அதிகாலை 3:30 மணிக்கும், போக் ஆரத்தி 12 மணிக்கும் செய்யப்பட்டது.
வியாஸ் பாதாள அறையில் ஆரத்திக்கான நேரம் தினசரி 5 ஆரத்தி, மங்களா ஆரத்தி காலை 3:30 மணி, போக் ஆரத்தி- மதியம் 12மணி, அப்ரன் ஆரத்தி- மாலை 4 மணி, சானிகால் ஆரத்தி- இரவு 7மணி, ஷயன் ஆரத்தி- இரவு 10:30மணி. இதுவரை 2 செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.