இந்திய வெளியுறவுப் பணி அதிகாரி சஞ்சய் வர்மா, மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி)ன் உறுப்பினராக இன்று பிற்பகல் பதவியேற்றார். யுபிஎஸ்சி பிரதான கட்டிடத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவருக்கு யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் மனோஜ் சோனி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
யார் இந்த சஞ்சய் வர்மா!
சஞ்சய் வர்மா 1990 ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். ஸ்பெயின் மற்றும் அன்டோராவுக்கான தூதர்; எத்தியோப்பியா, ஜிபூட்டி மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கான தூதர்; துபாய் துணைத் தூதர் ஆகிய பொறுப்புகளை வகித்த அவர், பெய்ஜிங், காட்மாண்டு, ஹாங்காங், மணிலா ஆகிய நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தில் பல்வேறு பொறுப்புக்களை அவர் வகித்துள்ளார்.
மும்பை, வில்சன் கல்லூரியில் படித்த அவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தின் ஜெய்ஹிந்த் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.
புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேசஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவிடமிருந்து சர்வதேச ஆய்வுகளில் பெல்லோஷிப் உதவித் தொகையை அவர் பெற்றார்.