கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு காரணமாக இன்று தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுகிறது.
மற்ற மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில், இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.