தமிழகத்தில் புற்றுநோயாக விளங்கும் இந்த கருணாநிதி குடும்பத்தை பிடுங்கி எறிந்து, எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
கருணாநிதியின் மகனான மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் அதிகமாக அடிப்படும் வார்த்தை ”முதலீடு” என்பதுதான்!
முன்பிருந்த எடப்பாடி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் முன்பு கருணாநிதி ஆட்சியிலும்கூட இந்த ”முதலீடு” என்னும் சொல்லாடல் அதிகமாக இல்லை.
இப்போது இந்த சொல் ஏன் பெரிதும் பேசப்படுகிறது? இந்த கேள்வி அதிக முக்கியத்துவம் உடைய கேள்வியாகும்!
முதலீட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய்க்கு சென்றுவந்தார்! தொடர்ந்து சிங்கப்பூர் சென்றார்! அதை தொடர்ந்து சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினார் மு.க. ஸ்டாலின்! உலக முதலீட்டாளர் மாநாட்டு பந்தல் பிரிப்பதற்குள் இப்போது மீண்டும் ஸ்பெயின் என்னும் ஒரு நாட்டுக்கு முதலீட்டுக்காக தனது மனைவியையும், தமிழக அரசின் உழவுத்துறை ஐஜியாக பணிபுரியும் திரு.செந்தில்வேலன் அவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார் முதலமைச்சர்!
இப்போது ஸ்பெயினிலும் சரி அப்போது துபாயிலும் சரி ஜப்பானிலும் சரி எங்கு முதலீடு என சொல்லிக்கொண்டு முதலமைச்சர் சென்றாலும் அவர் செல்வதற்கு முன்பாக முதலமைச்சரின் மருமகன் சபரீசனும் இன்னும் சில நபர்களும் முன்கூட்டியே அங்கு சிலபணிகளை செய்து வைப்பதற்காக சென்று விடுவதாக செய்திகள் உள்ளது! மருமகனும் மற்ற நபர்களும் அரசு பணியாளர்களோ அரசு பொறுப்பாளர்களோ அல்ல! அவர்களெல்லாம் முன்கூட்டியே அங்கு சென்று என்ன பணிகளை முன்கூட்டி செய்து வைக்கிறார்கள் என்னும் கேள்வி அரசியல் ஆர்வலர்களால் கேட்கப்பட்டு வருகிறது!
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் மக்கள் தலைவர் அன்ணாமலை ஐ.பி.எஸ் அவர்கள், ஸ்டாலின் அவர்கள் துபாயில் 6000 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் போட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, “இந்த 6000 கோடி முதலீடு என்பது தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்ட மு.க.ஸ்டாலினின் பணம்தான்! முறை கேடாக சம்பாதித்த மக்களின் வரிப்பணத்தைத்தான் லூலு மார்ட் போன்ற நிருவனங்களிடம் முன்கூட்டி தந்து வைத்து, அவர்கள் மூலமாக இவர்கள், தமிழகத்தில் முதலீடு செய்து மேலும் சம்பாதிக்க திட்டமிட்டு செயல்படுகிறார்கள்!” என்று அப்பட்டமான குற்றச்சாட்டினை முன்வைத்தார்கள்.
இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு மு.க. ஸ்டாலின் அவர்கள் கண்டனமும் தெரிவிக்கவில்லை, மான நஸ்ட வழக்கும் போடவில்லை, அந்த 6000 கோடி ரூபாய் முதலீடு இதுவரை தமிழகம் நோக்கி வரவும் இல்லை!
6000 கோடி முதலீடு என ஒப்பந்தம் போட்டு 6 மாதங்கள் ஆன பின்பு, “அந்த 6000 கோடி முதலீடு இன்னும் தமிழகத்திற்கு வரவில்லையே” என நிரூபர்கள் மக்கள் தலைவர் அன்னாமலையிடம் கேட்டார்கள்! பதிலளித்த மக்கள் தலைவர், “மு.க.ஸ்டாலினின் அந்த 6000 கோடி பணம் இங்கிருந்து அங்கு போகாமல் பார்த்துக்கொண்டோம், பின்பு எப்படி முதலீடு என்னும் பெயரில் அங்கிருந்து இங்கு வரமுடியும்?” என்று கேட்டார்! அந்த 6000 கோடி 20 மாதங்கள் ஆகியும் இதுவரை வரவில்லை!
நாமெல்லாம் மனைவியை அழைத்துக்கொண்டு, நகைக்கடைக்கு சென்று, வாழ்க்கைத்துணைக்கு பிடித்தார்போல நகைகளை வாங்கித்தருவோம்! நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது மனைவியாரை அழைத்துச்சென்று, மனைவியின் விருப்பப்படி, மகனுக்காக, மகளுக்காக, பேரனுக்காக, பேத்திக்காக என அவர்களின் ஆசைப்படி முதலீடுகளை செய்துத்தருகிறார் என சொல்லப்படுகிறது!
முதலமைச்சர் அவர்கள் அவரின் மனைவிக்கும் குடும்பத்தினர்களுக்கும் என்ன வேண்டுமானாலும் செய்து தந்துவிட்டுப்போகட்டும், நமக்கு அதில் ஆட்சேபனை இல்லை! ஆனால் முதலீட்டுக்கான அந்த தொகை தமிழர்களை வஞ்சித்து வரிபனத்தை சுரண்டி முறைகேடாக திரட்டிய ஊழல் பணம் என்பதால்தான் நாம் கேள்வி கேட்கிறோம்!
”திருட்டுப்பனத்தைக்கொண்டு மனைவிக்கும் மகளுக்கும் மகனுக்கும் பேரன் பேத்திகளுக்கும் நகைகளையும் முதலீடு என்னும் சொத்துக்களையும் வாங்கித்தருவதா?” – இதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது!
தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு ரூபாய் 6 லட்சம் கோடி முதலீடுகள் ஒப்பந்தம் ஆனதாக தமிழக அரசு அறிவித்தது! இந்த முதலீடு மாநாடு நடப்பதற்கும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் உத்திரப்பிரதேச மாநிலம் முதலீடு மாநாடு ஒன்றினை நடத்தியது, அதில் 33 லட்சம் கோடி முதலீடு சேகரிக்கப்பட்டது!
தமிழக மாநாடு நடந்த பின்பு குஜராத் மாநிலத்தில் இத்தைய மாநாடு நடந்தது! அதில் 26 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டது! இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக முதலீடு மிக மிக குறைவானது! அந்த குறைவான முதலீட்டிலும்கூட கருனாநிதியின் குடும்ப திருட்டு முதலீடுதான் 98 விழுக்காடுகள் என பேசப்படுகிறது!
இப்போது ஸ்பெயின் நாட்டில் ”ஹபக் லாய்டு” என்னும் நிருவனம் 2500 கோடி முதலீடு செய்யப்போவதாக மு.க. ஸ்டாலின் அவர்கள் ஸ்பெயினில் இருந்து அறிவித்துள்ளார்! இந்த பணம் மு.க.ஸ்டாலினின் ஊழல் பணம்தானா? ஹபக் லாய்டு மூலமாக நல்ல பணமாக இந்தியாவுக்குள் நுழைகிறதா? என்னும் கேள்வி எழுந்துள்ளது!
ஊழலில் திழைத்துக்கிடக்கும் தமிழகத்தில் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை என்பதுதான் தகவலாக உள்ளது! மொத்த தொலையில் 40 விழுக்காடு தொகையை லஞ்சமாக தரவேண்டும், எங்களின் ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் மூலம்தான் உங்களின் கம்பெனிக்கான நிலத்தை வாங்கவேண்டும்! – இவையெல்லாம் ஸ்டாலின் குடும்பத்தாரின் நிபந்தனைகள் என சொல்கிறார்கள்!
ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களும் மு.க. ஸ்டாலினைப்போல ஒரு ஊழல்வாதியின் மகன்தான்! நில மோசடி வழக்கில் 10 முறை அமலாக்கத்துறை அழைத்தும் வராமல் இழுத்தடித்தார்! இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழக அரசைப்போல சாராய வியாபாரத்தில் சம்பாதித்ததன் காரணமாக டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சரும் கைதாகும் நிலையில் உள்ளார்!
தமிழகத்தில் சாராய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சிறைச்சாலையில் உள்ளார்! சிறைச்சாலையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை பறிக்காமல், மாதாமாதம் ரூபாய் ஒரு லட்சத்து ஐயாயிரம் தொகையை அவருக்கு ஊதியமாக முக ஸ்டாலின் வழங்கி வருகிறார்! செந்தில் பாலாஜி வாயை திறந்து ” பங்கு கொடுத்தேன்” என்னும் உண்மையை அமலாக்கத்துறையிடம் சொல்லிவிட்டால், மு.க ஸ்டாலின் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதாலேயே செந்தில் பாலாஜி இன்னும் மான்புமிகு அமைச்சர்தான் என மு.க.ஸ்டாலின் தாஜா செய்து வருவதாக சொல்லப்படுகிறது!
சிறைக்கம்பிகளை என்ணத்துவங்குவதற்குள், ஊழல் பணத்தையெல்லாம் குடும்பத்தினருக்கு பங்கிட்டு கொடுத்துவிட வேண்டும் என்பது முக ஸ்டாலினின் ”நெருக்கடி நிலை” என சொல்லப்படுகிறது!
தமிழகத்தில் புற்றுநோயாக விளங்கும் இந்த கருணாநிதி குடும்பத்தை பிடுங்கி எறிந்து, தமிழகத்தை மிக விரைவில் காப்பாற்றியாக வேண்டும் என்னும் ”நெருக்கடியில்” பாரதிய ஜனதா கட்சியும் தேசப்பக்தர்களும் உள்ளனர்! ராமர் துணையால் நமது லட்சியம் விரைவில் நிறைவேரும்! வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த வெற்றியை நாம் அடைவது 100 சதவிகிதம் உறுதியாகும்! எனத் தெரிவித்துள்ளார்.