பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024ஐ அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தபட உள்ளது.
சட்டத்தின் நோக்கம்!
பொதுத் தேர்வுகள், அரசு வேலை ஆட்சேர்ப்பு மற்றும் மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை ஆகியவற்றில் நியாயமற்ற வழிமுறைகளுக்கு எதிராக, நாட்டின் முதல் தேசிய சட்டத்தை நிறுவுவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குற்றத்தில் ஈடுபடும், பரீட்சை அதிகாரிகள், சேவை வழங்கும் நிறுவனங்கள், நிறுவனங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியாக்கள், தனிப்பட்ட நபர், உள்ளிட்டோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளை இந்த மசோதா முன்மொழிகிறது.
நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 31- 2024) உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “தேர்வுகளில் முறைகேடுகள் குறித்த இளைஞர்களின் கவலையை மத்திய அரசாங்கம் அறிந்திருக்கிறது. எனவே, அத்தகைய முறைகேடுகளை கையாள்வதற்கு கடுமையானப் புதிய சட்டத்தை இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக UCC குழு வரைவை சமர்ப்பித்தது, நாளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி 5 ஆம் தேதி மசோதாவை நிறைவேற்றப் படவுள்ளது எனத் தகவல்
விண்ணப்பதாரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்தல், தாள்களைத் தீர்ப்பது, தேர்வு மையத்தைத் தவிர வேறு இடத்தில் தேர்வை நடத்துவது அல்லது தேர்வு மோசடியைப் புகாரளிக்காதவர்கள் (ஒரு கண்காணிப்பாளர் போன்ற) 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், கணினி அடிப்படையிலான தேர்வை நடத்தும் சேவை வழங்குபவரின், குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் நான்கு ஆண்டுகளுக்கு தேர்வை நடத்துவதற்கு தடை விதிக்கப்படலாம்.
இந்த மசோதாவில் வினாத்தாளை வெளியிடும், பொது ஊழியர்களுக்கு 3-5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
தேர்வு மாஃபியாக்களுடன் சேர்ந்து பொது ஊழியர்கள் ஈடுபட்டால், 5-10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.
கூடுதலாக, டிஜிட்டல் தளங்களைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை உருவாக்க பொதுத் தேர்வுகளுக்கான உயர்நிலை தேசிய தொழில்நுட்பக் குழு நிறுவப்படும்.
UPSC, SSC, RRB, IBPS, JEE, NEET மற்றும் CUET போன்ற நிறுவனங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் பாதுகாப்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கான தேசிய தரநிலைகளை இந்தக் குழு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.