ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!
Jun 15, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஞானவாபி வளாக பாதாள அறையில் பூஜை செய்ய தடை விதிக்க மறுப்பு!

மேல்முறையீட்டு வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 05:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் வழிபாடு செய்ய வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வாரணாசியில் உள்ள காசி  விஸ்வநாதர் கோவிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப் உத்தரவின்பேரில்,  ஏற்கெனவே அங்கிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில்  மசூதி  கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தொல்லியல் துறை ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியே நான்கு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில், ஒரு அறையில் காசி  விஸ்வநாதர் கோவிலில் பூஜாரியாக இருந்த சோம்நாத் வியாஸ், 1993 வரை பூஜைகள் செய்து வந்தார். கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், இந்த அறையை மூட, அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.

சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், அந்த அறையில் தொடர்ந்து பூஜைகள் செய்ய  அனுமதி கேட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத்  வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.  இதனையடுத்து, பல தசாப்தங்களுக்கு பிறகு, ஹிந்துக்கள் முதல்முறையாக நேற்று அங்கு வழிபாடு நடத்தினர்.

இதனை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் வாரணாசி நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் வழக்கு 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: Allahabad High CourtGyanvapi mosqueThe Anjuman Intezamia Masjidinterim stayVaranasi District Court
ShareTweetSendShare
Previous Post

புரோ ஹாக்கி லீக் : இந்திய அணி அறிவிப்பு!

Next Post

பொதுத் தேர்வுகள் மசோதா- 2024! – நாடாளுமன்றத்தில் அறிமுகம்!

Related News

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies