என்னுடைய மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024-வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக நான் வாகனத் துறையை வாழ்த்துகிறேன் என்று கூறினார். இன்று என்னால் அனைத்து ஸ்டால்களுக்கும் செல்ல முடியவில்லை, ஆனால் நான் பார்த்த ஸ்டால்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன என்றார் அவர்.
இதெல்லாம் நம் நாட்டில் நடப்பது நமக்கு மகிழ்ச்சியான தருணம். நான் இதுவரை கார் வாங்கியதில்லை, அதனால் எனக்கு அது குறித்த அனுபவம் இல்லை, நான் சைக்கிள் கூட வாங்கியதில்லை என்றார். மேலும் இந்த கண்காட்சியை டெல்லி மக்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனது முதல் பதவிக்காலத்தில் நான் ஒரு உலக அளவிலான மொபிலிட்டி மாநாட்டைத் திட்டமிட்டிருந்தேன். எனது இரண்டாவது பதவிக்காலத்தில், நான் நிறைய முன்னேற்றம் காணப்படுவதைக் காண்கிறேன், எனது மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என நம்புகிறேன். ‘சலியே சமாஜ்தார் கோ இஷாரா காஃபி ஹோதா ஹை’ என்று அவர் கூறினார்.
இன்றைய பாரத் (இந்தியா) வரும் 2047க்குள் ‘விக்சித் பாரத்’ என்ற நிலைக்கு முன்னோக்கி நகர்கிறது. இந்த இலக்கை அடைய, மொபிலிட்டி துறை முக்கியப் பங்காற்றப் போகிறது.
செங்கோட்டையின் அரண்களில் இருந்து, ‘யாஹி சமய், சாஹி சமய் ஹை’ என்றேன். நாட்டு மக்களின் திறமையால் நான் அந்த வார்த்தைகளை உச்சரித்தேன். இன்று, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்து வருகிறது, நமது அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சியில், நம் நாடு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று தெரிவித்தார்.