பேரறிஞர் அண்ணா வாரிசு அரசியலை விரும்பாதவர் என என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தியில்,
தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் அண்ணாவும் ஒருவர் என தெரிவித்துள்ளார்.
மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது, தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெய் வாங்குவதற்குச் சமம் என, மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், தான் தொடங்கிய கட்சியில் கூட, தனக்குப் பின் தனது வாரிசுகள் வர வேண்டும் என்பதை விரும்பாதவர் என கூறியுள்ளார்.
திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாதுரையின் நினைவைப் போற்றி வணங்குவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.