எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : மத்திய அரசு அறிவிப்பு!
Sep 10, 2025, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது : மத்திய அரசு அறிவிப்பு!

Web Desk by Web Desk
Feb 3, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1927ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கராச்சியில் பிறந்தவர். அரசியல் வாழ்க்கையை 1941ம் ஆண்டில் தனது 14 வயதில் சிறுவனாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக்கில் ஒரு தொண்டராக தொடங்கினார்.

பின்னர் 1951 ஆம் ஆண்டில் சியாமா பிரசாத் முகர்ஜியால் நிறுவப்பட்ட பாரத ஜனா சங்கத்தின் உறுப்பினராக ஆனார். 1957 ம் ஆண்டு அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். அவர் விரைவில் பொதுச் செயலாளராகவும், ஜன சங் தில்லி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார்.

அவர் 1970 ஆம் ஆண்டு டெல்லியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976 ல் இருந்து 1982 வரை குஜராத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1982 ஆம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை) இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.1990-ம் ஆண்டு அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத் நகரில் இருந்து அயோத்தி நோக்கி ரதயாத்திரை சென்றார்.

பீகார் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற போது அப்போதைய மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்தும்படி சமஸ்திபூர் மாவட்ட கலெக்டருக்கு பீகார் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.

அப்போது அந்த மாவட்ட கலெக்டராக பணியாற்றிய ஆர்.கே.சிங், அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுடன் அவரை கைதும் செய்தார். அத்வானி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அயோத்தியில் ராமர் கோவில் அமைவதற்கு இந்த ரதயாத்திரை மிக முக்கிய பங்கு வகித்தது என்றே கூறலாம்.

1998 முதல் 2004 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார். 2002 முதல் 2004 வரை அடல் பிஹாரி வாஜ்பாயின் அமைச்சரவையில் துணைப் பிரதமராகவும் அவர் பணியாற்றினார்.

2015 ஆம் ஆண்டில், அத்வானிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது அவருக்கு பாரத ரத்னா  விருதை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்து கௌரவப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: bjpcentral governmentlk advaniBharat Ratna Award!
ShareTweetSendShare
Previous Post

139 ரயில் என்ஜின்களில் கவச் அமைப்பு!

Next Post

U-19 உலகக்கோப்பை : இந்தியா அரையிறுதிக்கு தகுதி !

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies