மக்களவைத் தேர்தலையொட்டி தூத்துக்குடியில் பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி, தேர்தலைச் சந்திக்க பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.
திருநெல்வேலியில் ஏற்கனவே, கட்சி அலுவலகம் திறந்துள்ளது பாஜக. அதேபோல், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிகளை பாஜகவினர் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி பாஜக மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் மச்சாது நகரில் தொடங்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான சசிகலா புஷ்பா அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.