தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி 3 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறாா்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்.12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுeர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். சட்டப்பேரவைக்கு உரை நிகழ்ந்த வருமாறு ஆளுநரைப் பேரவை தலைவர் அப்பாவு சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்கிறார். அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திப்பார் என கூறப்படுகிறது.
அண்மையில் அந்தமான், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அமித் ஷாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.