கானாபராவில் 100,000 தியாக விளக்கேற்றி அசாம் சென்ற பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடி, குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் அஸ்ஸாமில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, கானாபராவில் 1,00,000 தீபங்களுக்கு விளக்கேற்றுவதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடினர். 100,000 தியாக தீபங்கங்களை ஏற்று வைத்து பிரதமர் மோடியை ஆயிரக்கணக்கானோர் வரவேற்றனர்.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, தனது மகிழ்ச்சியான தருணத்தை தனது எக்ஸில் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக, கவுகாத்தியில் உள்ள விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளித்தனர்.
அஸ்ஸாமின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும், பாரம்பரிய நடனத்தின் துடிப்பான காட்சியுடன் விமான நிலைய வளாகம் உயிர் பெற்றது. ஏராளமான நடனக் கலைஞர்கள் மற்றும் நலம் விரும்பிகள் வரிசையில் நின்று பிரதமருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.