மும்பையில் கடலில் விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டுள்னனர்.
மும்பை கடற்கரையில் தனியார் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த நபரை இந்திய கடலோர காவல்படையினர் நேற்று இரவு பத்திரமாக மீட்டுள்ளனர்.
இந்த மீட்பு பணி சுமார் மூன்று மணி நேரம் நடந்துள்ளதாக அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தனியார் கப்பலில் இருந்து மும்பைக்கு அப்பால் கடலில் ஒரு நபர் தவறி விழுந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினரை அந்த இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து போராடி அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது .
இந்திய கடலோர காவல்படை 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கடற்படை வீரர்கள் இதுவரை 11,561 உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கடலோரக் காவல்படை பிப்ரவரி 1 அன்று தனது 48வது தினத்தை கொண்டாடியது. 2023-ம் ஆண்டில் மட்டும் 200 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
152 கப்பல்கள் மற்றும் 78 விமானங்கள் கொண்ட இந்த கடற்படை ரூ.15,343 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்துள்ளது.