டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!
Apr 2, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

Murugesan M by Murugesan M
Feb 5, 2024, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் சுற்றில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 3-ஆம் தேதி, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தானில் விளையாடியது.

முதல் நாளில், இரண்டு ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதன் முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார், பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியுடன் விளையாடினார். இதில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் 6-7, 7-6, 6-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தான் வீரர் ஐசம் அல் ஹக் குரேஷியை வீழ்த்தினார்.

அதேபோல், நேற்று நடைபெற்ற மற்றொரு ஒற்றையர் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீராம் பாலாஜி பாகிஸ்தான் வீரர் அகீல் கானுடன் விளையாடினார். இந்தப் போட்டியில் ஸ்ரீராம் பாலாஜி 7-5, 6-3 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானின் அகீல் கானைத் தோற்கடித்தார். இதனால், குரூப் சுற்றில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது நாளான நேற்று நடந்த இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி – சகெத் மைனெனி ஜோடி, பாகிஸ்தானின் முஜாமில் முர்தசா – அகீல் கான் ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா 6-2, 7-6 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானைத் தோற்கடித்து தொடரை கைப்பற்றியது.

இதை அடுத்து ஒற்றையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் நிக்கி பூனச்சா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பாகிஸ்தானின் முகமது சோயிப்பை வீழ்த்தினார். ஐந்தாவது போட்டி நடத்தப்படவில்லை. இதனால், 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டம் வென்றது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும், தொடர்ந்து பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: tennisDavis Cup Tennis: India defeated Pakistan!
ShareTweetSendShare
Previous Post

‘TS’ என அழைக்கப்பட்ட தெலுங்கானா, இனி ‘TG’ என அழைக்கப்படும் : அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!

Next Post

ஞானவாபியும், மதுராவும் ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள் – கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் 

Related News

மதுரவாயல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின் தீவிர வாக்கு சேகரிப்பு!

பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் – அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ!

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies