ஞானவாபியும், மதுராவும் நிம்மதியாக விடுவிக்கப்பட்டால் மற்ற விஷயங்களை இந்துக்கள் மறந்து விடுவார்கள் என ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த் தேவ் கிரி மஹராஜ் தெரிவித்துள்ளார்.
புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஞானவாபியும், மதுராவும் விடுவிக்குமாறு கரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இவை ஆக்கிரமிப்பாளர் தாக்குதல்களின் மிகப்பெரிய வடுக்கள். இந்துக்கள் வேதனையில் உள்ளனர். இஸ்லாமியர்களால் இந்த வலியை அமைதியாக குணப்படுத்த முடியும். சகோதரத்துவத்தை அதிகரிக்க உதவுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இந்தக் கோயில்கள் விடுபட்டால் மற்ற கோயில்களைப் பார்க்கக் கூட நாங்கள் விரும்பவில்லை.நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கியான்வாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடையை மறுத்த சில நாட்களுக்குப் பிறகு கோவிந்த் தேவ் கிரி மகாராஜ் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.