2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதன் ஒரு பகுதியாக, தரம் தொடர்பான இளைஞர் விழா தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
டெல்லி பாரத மண்டபத்தில் இந்திய தர கவுன்சில் சார்பில், தரத்திற்கான இளைஞர் திருவிழா நடத்தப்பட்டது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதன் ஒரு பகுதியாக, தரம் தொடர்பான இந்த இளைஞர் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துக் கொண்டார். இந்த விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது, இந்த விழா நாட்டின் இளைஞர்களிடையே தரம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கும். நாம் அனைவரும் தரம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். அனைத்திலும் தரமானதை தேர்வு செய்ய வேண்டும். தர உணர்வு அனைவருக்கும் முக்கியமானது என்று கூறினார்.
டெல்லி பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.